அக்கினியே தேவ அக்கினியே

 

 

அக்கினியே தேவ அக்கினியே

இறங்கிடுமே இப்போ இறங்கிடுமே

தேவ நதியே ஜீவ நதியே

பாய்ந்திடுமே என்னில் பாய்ந்திடுமே

 

  ஆவியால் அக்கினியால்

  என்னை அபிஷேகிப்பேன் என்றீரே

  உம் மகா வல்லமையால்

  என்னை நிரப்பிடும் இயேசுவே  - அக்கினியே

 

  அக்கினி நாவுகளாய்

  என்னில் அமர்ந்திடும் தேவ ஆவியே

  நான் பற்பல பாஷைகளை

  பேசி துதித்திட செய்திடுமே  - அக்கினியே

 

  பலீபீட அக்கினியால்

  என் நாவை தொடும் தேவனே

  நான் பரிசுத்தத்தோடு என்றும்

  உம் பணி செய்திடவே                    - அக்கினியே

 

                  அக்கினி நதியாய் என்னில்

  பாய்ந்திடும் தேவ ஆவியே

  நான் அவியாத அக்கினியாய்;

  என்றும் ஜீவாலிக்க செய்திடுமே          - அக்கினியே